2008 ஆம் ஆண்டில் இந்தியில் தலை சிறந்த கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு, சென்னையில் உள்ளே மிகப் பெரிய MNC நிறுவனத்தில் வேலை கிடைத்தது. என் சொந்த ஊர் கோவை, சென்னையில் நல்ல சம்பளத்துக்கு தனியாக வசித்து வந்தேன்.
முதல் மாதம் என் நிறுவனத்தில் ஒரு மிகப் பெரிய 5 ஸ்டார் ஹோட்டலில் தாங்க வைத்தார்கள். அடுத்த மாதத்தில் இருந்து நானும் என் கம்பெனி அருகில் ஒரு நல்ல வீடு தேட தொடங்கினேன். என் சில நண்பர்கள் அபார்ட்மெண்ட் எடுத்துப் பகிர்ந்து கொண்டார்கள்.
எனக்கு அபார்ட்மெண்ட் எடுப்பதா? வாடகை வீடு எடுப்பதா? என்று மிகவும் குழப்பத்தில் இருந்தேன். பணம் பெரியதாகத் தெரியவில்லை, இளமையான வயதில் நிறையச் சம்பாதிக்கிறேன், எந்த ஒரு குடும்ப பொறுப்பும் இல்லாமல், சந்தோஷமாக இருந்தேன்.
ஆகையால் மிகவும் ஆடம்பரமான வெள்ளை நிறத்தில் 2BHK கொண்ட ஒரு குடி இருப்பை வாடகை எடுத்தேன். வாடகை மிகவும் அதிகமாக இருந்தது, இருந்தாலும் சமாளித்து விடுவேன் என்று நம்பிக்கை இருந்தது. யாராவது வந்து பகிர்ந்து கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.
என் அடுத்த வேலை வீட்டு வேளைக்கு ஒரு அழகான …